Wednesday, December 19, 2012

கப்பல் எப்படி மிதக்கிறது? அனைத்து வாசக அன்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள் .  

   ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு ஏற்படுகிறது. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

   சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் எடை உண்டு. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

   10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.


  அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றுக்கொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆர்க்கிமிடிஸ் கருதினார்.


  காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆர்க்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.   வெத்திலை ,பாக்கு சுண்ணாம்பை நீரில் இட்டால் வெத்திலை மிதக்கிறது ,சுண்ணாம்பு கரைகிறது பாக்கு தாழ்கிறது .இது எதனால் .ஒரு சிறிய ஊசி .பிளேடு (அறுவை ) கரண்டிபோன்ற லோகத்தினால் ஆனவற்றை நீரில் போடும் பொது படார் என தாழ்கின்றது.ஆனால் என்ன வினோதம் அதே லோகங்களினால் ஆன பாரிய கப்பல்கள் மிதக்கிறது .மிதப்பதொடு  அல்லாமல் எக்கச்சக்கமான பாரமான பொருள்களை ஏத்திக்கொண்டு உலகம் எல்லாம் வலம் வருகின்றது .


மற்ற வினோதம் நாலு கால் பிராணிகள் நீரில் வீழ்ந்ததும்  (நீச்சல் தெரியாத போதும் ) ஒருவித சலனமும் இன்றி மிதந்து குசாலாக நீந்தி வந்து கரை சேர்க்கிறது .ஆனால் இந்த படு பாவிகள் இரண்டு கால் பிராணியான மனிதனோ நீச்சல் தெரியாத விடத்து மூழ்கி இறந்து விடுகிறான் .

இது எதனால் .விடைகளை நானே சொன்னால் சுவாரசியமாக இருக்காது .உங்களின் தேடலுக்காக விடுகின்றேன் .அறிந்தவர்கள் ஏராளம் இருப்பீர்கள் .அறியாதவர்கள் அனைவரும் புரியக்கூடிய விதத்தில் இலகு நடையில்  அள்ளி வீசுங்கள் .விடுபட்டவை இருந்தால் நான் வழங்குவேன்
   கப்பல்கள் மிதத்தல் ..........மிதந்தால் மட்டும் போதாது .கடலில் உண்டாகும் பல்வேறு புற காரணிகளுக்கும் (external factors ) தாக்கு பிடிக்க கூடியதாக வடிவமைக்கபடல் வேண்டும் .வீசும் காற்று ,அலைகள் (swell ) நீரடியில் உண்டாகும் நீரோட்டம் (curent )  எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்து மிதந்து நெடும் தூரம் தாழ்ந்து விடாது பயணிக்க வேண்டும் .இதற்கு stability of the vessel (கலத்தின் இஸ்திர தன்மை) எனப்படும் .

  இதானது கப்பலொன்று கட்டப்பட்டு முன் அதன் வடிவமைப்பாளர்கள் (naval architect)
மாதிரி (model ) ஒன்று அமைக்கப்பட்டு தொட்டி ஒன்றில் மிதக்கவிட்டு எல்லா வகையான சூழல்களையும் செயற்கை ஆக உண்டு பண்ணி பரீட்சிக்க பட்ட பின்பே 
கப்பல் கட்டப்படும் .அதோடு கப்பல்களில் சரக்கு ஏற்றப்படும் பொதி மிக கவனமமாக 
இந்த இஸ்திரதன்மை பேணும் பொருட்டு பல stability calculations செய்தே ஏற்றப்படும் .
சும்மா வண்டில் லொறி களில் பொதி ஏத்துகிற மாதிரி ஏத்தினால் பிரண்டு கவுண்டு
தாழ்ந்து விடும் உள்ள எல்லாருக்கும் மேல் லோகத்துக்கு விசா கிடைக்கும் .நீர் நிறைந்து தாண்டு கொண்டு இருக்கும் கப்பலில் பணியாளர்கள் உயிர் தப்ப வழிகள் பல ஆனால் unstable கப்பல்கள் ஒரே அடியாக பக்கவாட்டில் சாய்ந்து கவுண்டு தாழும்.
அதுக்கு சொல்லுகிறது **capsize ** என்று .தப்ப வாய்ப்பே இல்லை .அரை குறை அதிகாரிகளின் தவறான சரக்கேற்றல்களினால் (loading ) தாழ்ந்த கப்பல்கள் பல .
நீண்டு போவதால் மீண்டும் சநதிப்போம் குஞ்சுகளா .பாய்
இது ஒரு
இடத்திலிருந்தும் சுட்ட ஐட்டம் இல்லை என் எண்ணத்தில் உதித்தவை .

ஆக்கம்: மனோகரன் கந்தையாRead more Link     Thanks to  Panncom

No comments:

Post a Comment