Wednesday, April 16, 2014

Strawberry உடன் ஒருவர்

          இலங்கையிலேயே எனக்கு தெரிஞ்சு அருமையான இடம் " கண்டி " தான். முதல் முறையா கண்டிய சுத்திப்பாத்திட்டு நுவரேலியாக்கு வந்து சேந்தோம் அப்போ பின்னேரம் 6 மணி இருக்கும் .

          தசியும் , Sir உம் எங்களுக்கு சாப்பாடு வாங்க போட்டினம் . நாங்க எல்லாம்
Bus க்கு பக்கத்திலயே இறங்கி நிண்டோம் . ஒரு மொக்க Drum  அ  வச்சு ஒரு நாலு பேர் மாறி மாறி
அலுப்பு குடுத்தாங்கள் .

         நான் கொஞ்ச நேரம் அவங்களா பாத்துக்கொண்டு நிண்டன் . தொடர்ந்தும் அந்த அற்ப்புதமான  இசைய கேக்க முடியாம கொஞ்சம் தள்ளி Bus ஓட மற்றப்பக்கம் வந்தன்.

        அதில மூண்டு பேர் Photo எடுத்துக்கொண்டு நிண்டாங்கள் , நானும் அவங்களோட போய்  நிண்டு
Photo  எடுத்தான் .

         இடையில பாவே  "என்ர  Drum  அ என்ன பண்ணுறாங்களோ " எண்டு சொல்லிக்கொண்டு போனான்



        நாங்க எல்லாரும் Colour  களற   Sweaters , மப்பிளர்,  குளிர் தொப்பி   எல்லாம் வாங்கிப் போட்டிருந்தோம்.

       எல்லாருக்கும்  தெரியும்  Tour முடிஞ்சதுக்கு பிறகு இதுகள தொடவே மாட்டம் எண்டு     அனா எல்லாருக்கும் வாங்க வேணும் எண்டு ஆசை அனேகமா எல்லாரும் வாங்கியும் இருந்தோம்.

     
        நாங்க கதச்சு கொண்டு நிக்கேக்கையே  அந்த பக்கம் ஒருத்தர் வந்தார் .

    தையல் போட்ட கறுப்பு செருப்பு ,  சேட்டுக்கு மச் ஆகவேணும் எண்டு
போடாத கோட்டும்  குளிருக்காக மட்டும் போட்ட ஒரு தொப்பியும்
   ஒரு சாதாரண தொழிலாளிக்கன உருவத்தோட கையில ஒரு Shopping bag   உம்  வச்சிருந்தார் .     மற்ரக் கையில ஒரு பிளாஸ்டிக் பெட்டீல Strawberry  பழங்கள் வச்சிருந்தார் .


        அவர் ஒரு Strawberry  வியாபாரி .


        நான் இதுவரைக்கும் Strawbarry  சாப்பிட்டதேல்லை ஆனா Jam , Ice cream சில Advertisement இல எல்லாம் பாத்து கொஞ்சம் பழகின பழம் தான்.

        எனக்கு அத நேரில பாத்ததுமே வாங்கி சாப்பிட்டு பாக்க  வேணும் எண்டு தோணிச்சு .

       ஒரு பேச்சுக்கு என்ன விலை எண்டு கேட்டிட்டு 150 ரூபா குடுத்து ஒரு Box அ  வாங்கினான் .    

       அவர் ஒரு சந்தோசமான சிரிப்போட மிச்சக்காச குடுத்தார். நானும் பதிலுக்கு சிரிச்சிட்டு பெட்டிய திறந்தன்.

       என்ன மாதிரியே என்னோட friends உம் இதுவரைக்கும் சாப்பிட்டது இல்ல எல்லாருமே எடுத்து சாப்பிட்டாங்கள்.

       ஒருத்தன் சாப்பிர்ற மாதிரியே படம் எடுத்தான்  இன்னொருத்தன் படம் எடுத்த உடனேமே அத பறிச்சு சாப்பிட்டான்

        எல்லாரும் வடிவா சாப்பிட்டிட்டு Bas இல ஏறி Seat இல இருந்தோம் .

        கரை ஜன்னல் வழியா தூரத்தில ஒரு Van நிக்கிறது தெரின்ச்சிது .  அதில முன் seat இல ஒருதடியன்  சிக்கிரட் பத்தி கொண்டு இருந்தான் .

       Strawberry விக்கிறவர் என் Seat க்கு முண்டு Seat  முன்னாடி இருந்த ஒரு பொன்னுக்கு Strawberry குடுத்திட்டு வெளியால ஜன்னல் வழியா காசு வாங்கி கொண்டு இருந்தார் .

        Van  இல இருந்தவன் Straeberry விக்கிறவர கூப்பிட்டான் . அவர் கவனிக்காம Strawberry வித்திட்டு இருந்தார் . அவன் திரும்ப திரும்ப கூப்பிட்டிட்டு பக்கத்தில நிண்ட அவன்ர  ஆள் ஒருத்தன அனுப்பினான் .

        அவன் Straeberry  விக்கிறவர் கிட்ட வந்து அங்க வரட்டம் எண்டு சொன்னான் .  அவரு ஒண்டும் சொல்லாம வேற பக்கம் நடக்க அரம்பிசார் .

       அவன் அவர விடாம கையப்பிடிச்சு இழுத்துகிட்டு Van பக்கம் போனான் .

       Van இல இருந்த தடியன் சிகரெட்ட தூக்கி போட்டிட்டு " என்ன கூப்பிட்ட வர மாட்டியே " எண்டு வெருட்டினான் .

       Straeberry  காறர் குரல்ல சின்ன நடுக்கத்தோட "விடுங்க தம்பி நான்  யாவாரம் பண்ணுற நேரம்" எண்டார்.

        அவன் " நாங்க என்ன காசு குடுக்க மாட்டோமா " எண்டான் அவர் ஒண்டும் பேசாம நிண்டார் .

        அவன் பைய பிடுங்கி ஒரு பெட்டிய வெளிய எடுத்தான் .பெட்டிய திறக்காமலே இடைவெளியால ஒரு பழத்த எடுத்து திண்டான் .

        "குடுங்க தம்பி தொழில் பண்ணுறது தம்பி "

     அவன் ஒரு மாதிரி அவர பாத்திக்கிட்டே Van அ start பண்ணி போனான் .

         அவர் பின்னலயெ கெஞ்சிக்கொண்டு ஓடினார் .

         கொஞ்சத்துரம் போனதும் பைய வெளியால தூக்கி போட்டிடு சுட்டு விரல வெளியால பயமுறுத்திற மாதிரி காட்டீட்டு போனான் .

         Strawberry விக்கிறவர் ஓடிப்போய் அது எல்லத்தயும் எடுத்து தன்ர சேட்டில  லேசா துடைச்சு பய்யில அடுக்கினார் .

          பைய கையில கொழுவிக் கொண்டு கண்ணத்துடச்சு கொண்டு வந்தார் .




          அவர் என் Bus கிட்ட வந்தப்போ  அவர கூப்பிட்டு இன்னொரு Strawberry Box வாங்கினேன் .

          அவர் அந்த பெட்டியல்ல ஒரு நல்லபெட்டியா எடுத்து குடுத்தார் .

         ஆனா அவர் முகத்தில முதல் இருந்த்த மாதிரி உண்மையான சிரிப்பு இல்ல .




          பாவே Drum அ கொண்டு வந்து என் பக்கத்து Seat  இல இருந்தான்.

 "  Strawberry ஆ மச்சி எங்க குடு "
         எண்டு வாங்கி சாப்பிட்டு கிட்டே Drum அ ஒரு வழி பண்ண ஆரம்பிச்சான்......

"  based on a true event  "                    

1 comment:

  1. நல்ல முயற்ச்சி ஆனால் இன்னும் கொஞ்சம் டீப்பாய் கதையை எழுதியிருக்கலாம்.

    ReplyDelete