Friday, December 7, 2012

! * உயிருக்காகப் போராடிய நோயாளியை ஏற்ற மறுத்த ‘அம்புலன்ஸ்’ !


           வடமராட்சி கிழக்கு மருந்தங்கேணி வைத்தியசாலைக்கு நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நோயளி ஒருவரை உறவினர்கள் கொண்டடு சென்ற போது.மேலதிக சிகிச்சைக்காக அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அங்கு கூறப்பட்டது.ஆனால் அந் நோயளரைக் கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் அங்கு இருக்கிவில்லை. இது பற்றி உறவினர்கள் கேட்ட போது அம்புலனஸ் வைத்தியரை ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.  உடனடியாக அப்பகுதிக்கு வந்த பேரூந்தில் நோயளரை ஏற்றி பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த வழியில் மருதங்கேணி வைத்தியசாலை அம்புலன்ஸ் வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பேரூந்தின் சாரதி அம்புலன்ஸ் சாரதியை வழி மறித்து வேகமாக பேரூந்தை கொண்டு செல்ல முடியாது உங்கள் வண்டியில் உடனே கொண்டு செல்லுங்கள் எனக் கூறிய போது ‘ வைத்தியரை மட்டுமே இதில் கொண்டு செல்லலாம் எனக்கூறி அம்புலன்ஸ் சாரதி அதை மறுத்ததாகத் தெரியவருகின்றது.  இதனால் அங்கு முறுகல் நிலை தோன்றியதாகவும் தெரியவருகின்றது. பின்னர் பேரூந்திலேயே நோயாளி பருத்தித்துறை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். 

No comments:

Post a Comment