Thursday, December 12, 2013

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

      ரயிலுக்கு வெளியே விழுந்து கிடந்த என் கண்கள் சட்டென்று ரயிலுக்குள் தாவி ஒரு குறிப்பிட்ட காட்சியில் குவிந்து மொய்த்தன 

   பொன்னிறக் கூந்தல்  கொண்ட  பெண்ணொருத்தியைத் தன் மொத்த நெஞ்சிலும் சாய்த்துக்கொண்டு அவள் காத்தாடி வாரங்களில் விரல்களால் வீணை வாசித்துக் கொண்டுடிருந்தான் இம்மை மறந்த இளைஞன் ஒருவன் .

      தங்கள் இருவரைத் தவிர , இந்த பூமியில் அனைவரும்  அகிறினைகலாய்    ஆகுக  என்று சபித்துவிட்டு  ஆரம்பித்தர்தார்கள் அவர்கள் ஆட்டத்தை  .



      தழுவுவதும் , சாய்ப்பதும்   , சரிவதும்  முத்தமிடத் தெரியாமல் முத்தமிடுவதுமாய்   அவர்களின் ரயில் சேவை தொடர்ந்ததது 

      தொடர்ந்து பார்க்காதே என்று தலை திருப்பியது தமிழ் கூச்சம் . தலையின்   பேச்சை கேளாமல் காட்சியை கண்டு கண்டு திரும்பியது கவிதை கண்.

      புத்தகம் படித்துக்கொண்டும் செல்போனில் சிணுங்கிக் கொண்டுமிருந்த சக பயணிகள் யாரும் கடைக்கண்காளால்  கூட அதை  கவனிக்கவில்லை

    அழுத்தி வைக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்த்த எனக்கு  தான் அது புத்தம் புதுசு ;  அவர்களுக்கு அது பத்தாம் பழசு .                                           
                       
                                                                                                               ....:::: வைரமுத்து :::.....                            

No comments:

Post a Comment