Tuesday, April 1, 2014

நனோ உலகில் ஒரு நாள்


இன்று    2011.06.11    08.05.00 pm 

        நான் தான் சுரேஸ். எனக்கு வயது 30. அடுத்த வருசம் 31. இல்ல அடுத்த வருசம் நான் உயிரோட இருக்க மாட்டேன். ஏன்னா எனக்கு புற்றுநோய். ஏல்லா டோக்ட்ராரும் சொல்லீட்டாங்க இன்னும் 6 மாதம் தான் என்று. இந்தியா கூட போய்ப் பாத்திட்டேன். 


    இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் என் பையன் ராயுக்கூடவும் என்னோட மனைவியோடும் 6 மாதம் இருக்கலாம் என்கிறதில் எனக்கு சந்தோசம் தான்.  


     எல்லாக கவலையும் மறந்து நான் சந்தோசமா இருக்கிறது என்றால் இந்தக் கடற்கரேலதான் உள்ளங்கால் வரைக்கும் குளிரவைக்கும் காற்று. துரத்தில் தெரியிற துறைமுகத்தில் நிக்கிற கப்பல்களில் இருந்து வரும் வெளிச்சம், நடச்சத்திரங்கள். இன்னு பாத்திகிட்டே இருக்கலாம் ஆனா இப்போ கடற்கரையில் இருககிறது நானும் என்னோட நாய் “யோனும்” தான்.

....................................................................................

         திடீர்ரென ஒரு வெளிச்சம்என் கண்ண மறைக்குது மீண்டும் கண்ணத்
திறந்து பாக்கிறன் ஒரு கார் போன்ற அமைப்பு அனா அது தரைக்கு மேல் கொஞ்ச உயரத்தில் மிதந்து கொண்டிருக்குது அதில் இருந்து ஒரு மனிதன் (சுமார் 25 வயதில்) வெளிய வர்றான். அவன் என்ன நோக்கிவர ஆரம்பித்தான் எனக்கு பயமா இருந்தாலும் தயிரியம் மாதிரி காட்டிக் கொண்டு இருந்தேன் அவன் என்கிட்ட வந்து தொப்பியக் களட்டீடடு என்அருகில் இருந்த கல்லில் இருநதான்.     


      அவன் என்ன நோக்கி தன்னோட பேர் ராயு என்டான் (அது என்னோட பையன் பேர்) நான் தான் அவனோட அப்பா எண்டான் நான் சிரிச்சுக் கொண்டே உனக்கு என்னவிட 5 வயது தான் குறைவு இருக்கும் ஆனா என் மகன்ன்கிறான்றேன். அதுக்கவன் தான் எதிர்காலத்தில் இருந்து வாறதாகக்கூறினான் (அதாவது 2031ம் அண்டில் இருந்து) நான் மறுபடியும் சிரிச்சிட்டே எந்தப்படத்தில் இந்தக்கதையைப்பார்த்தாய் என்றேன். அவன் தன்னொடபையில் இருந்து போன் மாதிரியான ஒன்றை எடுத்தான் சில போட்டோக்களை காட்டினான். அதில் என்னொடமுண்டுமாதத்துக்கு அப்புறம் எடுத்தபடங்களும் என்னோட மனைவி பிள்ளைகளின்ர 20 வருசத்திக்கு அப்புறம் எடுத்தமாதிரியானா படங்களும் இருந்தன.  ப்பவும் நான் நம்பவில்லை. அவன் என்னை தன்னோட காருக்குள் இழுத்திட்டு போனான் உள்ள போன பிறகுதான் தெரியும் அது கார்இல்ல அது ஒரு காலஇயந்திரம் என்று அதில கைக்கடிகாரம் இருந்தது. அது நான் கட்டீட்டு இருக்கிற கடிகாரம் தான். ஆனா கொஞசம் பழுதாய் இருந்தது அதை அவன் என்னோட ஞாபகமா வைத்திருக்கிறதா கூறினான்.


           நான் அவன நம்பினேன் அவன் நான் 2012 ஆண்டே இறந்து விடுவன் என்று கூறினான். அது எனக்கு தெரிஞ்சது தானே.    ஆனா அவனால் என்னக்காப்பாற்ற முடியும் என்றும் அதுக்காக தான் வந்திருக்கேன் என்றும் கூறினான் எப்படிக்காப்பாற்றுவாய் உலகத்தில் எந்தமுலைக்கு போனாலும் காப்பாற்ற முடியாதே என்றேன் அவன் சிருச்சிக்கிட்டெ 2031ம் ஆண்டுக்கு நாம் இருவரும் போனால் அங்க இருக்கிற நனோ தொழில் நுட்ப ரோபோக்கள் மூலம் இதை சரிசெய்து கொள்ளலாம் என்றான். எனக்கு காலப் பயணத்தையும் நோயில்லாமல் எனது குடும்பத்துகூட வழ்றத நினக்க எனக்கு மிக மகிழ்வாக இருந்தது நான் காலப்பயணத்திற்க்கு தயாரானேன் அவன் இயந்திரத்த செப்பம் செயது விட்டு புறப்பட்டான் மீண்டும் ஒரு பாரிய ஒளி 

............................................................................


2031.6.11.   08.05.00 pm

      என்ன ஒரு ஆச்சரியம் 2031ம் ஆண்டுக்குரிய உலகில் (நனோ உலகில்) நான் இருக்கிறேன் இங்குள்ள கட்டிடங்கள் பாதி உயரமாகவும் மீதி நிலத்திறிக்கு கீளும் இருப்பதை உணர்ந்தேன். மனிதர்கள் எல்லோரும் வேகமாக நடந்து கொண்ருந்த்தனர்.  அப்போது ராயு என்னிடம் ஒரு பையைக்கொடுத்தான் அதில ஆடைகளும், சப்பாத்துகளும், தொப்பியும் இருந்தது. அவற்றை அணிந்து வருமாறு ராயு என்னிடம் கூறினான். நானும் அவற்றை அணிந்து கொண்டேன். அவற்றுடன் ராயுவுடன் எனது எதிர்கால வீட்டிற்க்கு சென்றேன் அங்கே எனது 45 வயது மனைவியை கண்டேன் ஆனால் அவள் என்னை பார்க்கவில்லை பார்க்காதவாறு இரகசிகமாக ராயு என்னை தனது அறைக்கு அழைத்துச் சென்றான் எதற்க்காக இரகசிகமாக வந்தோம் என்றேன் அதற்க்கு அவன் இந்தவிடயம்யாருக்கும் தெரியாது என்றும் இது சட்டத்திற்க்கு புறம்பானது என்றும் கூறினான்

       அவனது அறை மிக அபுர்வமாக இருந்தது அவனது அறைச்சுவர்கள் உயர்வாக இருந்தது உயரத்தில் தட்டுகள் அமைத்து அங்கே பொருட்கள் வைக்கப்ட்டிருந்தது. அவற்றை எவ்வாறு எடுப்பாய் என்று ராயு விடம் கேட்க்க அவன் சுவரில் பல்லிபோல் தவண்டு தவண்டு ஏற ஆரம்பித்தான் அவ்வாறு ஏற என்னாலும் முடிந்தது. இது எனது சப்பாத்தின் முலம்  என்று புரிந்து கொண்டேன்.

        பின்னர் சிகீச்சைக்காக வைத்திய சாலை செல்லவேண்டும் என்று ராயு கூறினான் எனக்கு இனம் புரியாத ஒரு மகிழச்சி. அதேநேரம் இது நடக்குமா எனும் ஒரு சந்தேகம் நாம் வைத்தியசாலை செல்லப் புறப்பட்டோம்


     வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தோம் மழை வருவது போல் எனக்கு தோன்றியது அனால் ராயு அதைப் பற்றிக் கவலைப்பாடமல் நடந்து கொண்டே இருந்தன் மழை வந்தேவிட்டது ராயு தனது ஆடையில் இருந்த தொப்பியை அணிந்து கொண்டான் எனக்கும் அணிந்து விட்டான் என்ன ஆச்சரியம் ஆடை நனையவே இல்லை இதைப் பற்றி ராயுவிடம் நான் கேட்டேன் ராயு இது நனோத்தொளில் நுட்பம் முலம் செய்யப்பட்ட ஆடை  என்றும்  இது நனையா என்றும் கூறினான் அப்படியானால் தோய்பது எவ்வாறு என்று கேடக அவன் சிரித்த படியே இவை அழக்குப் படியாத ஆடைகள் என்றும் இவற்றை தோய்க்க தேவையில்லை என்றும் கூறினான்



   இவ்வாறு பேசிக்கொண்டே நாம் ஒரு பாலத்தை அடைந்தோம் அது இரும்பால் அமைக்கப்பட்டதாக தெரிய வில்லை இதைப்பற்றி கேட்க்க நினைக்கவே ராயு இவை காபன் நனோக்குளாய்களால் ஆக்கப்பட்டவை என்றும் இவை இரும்பைவிடவலிமை ஆனது என்றும் கூறினான் இது ஒரு நனோ தொளில் நுட்பக் கண்டு பிடிப்பு என்று உணர்ந்து கொண்டேன்

  
   ஒரு வழியாக நாம் மருத்துவ மனையை அடைந்தோம் அங்கே சிறுவர்கள் எல்லோரும் பயம் இன்றி ஊசி போட்டுக்கொள்வதை கண்டுவியந்தேன் எனக்கான சிகிட்ச்சை ஆரம்பிக்கப்பட்டது ஒரு வெட்டுக்கூட இல்லாமல் எனக்கு சீகிட்சைகள் நடந்தன. 

...............................................

        என்னையே என்னால் நம்பமுடியவில்லை எனக்கு புற்று நோய் குணம் அடைந்தது நான் கனவில் கூடநினைக்காதது நடந்தது ஏனக்கான சில மருந்துகள் வளங்கப்பட்டது அவை மிகச்சிறியனவாக இருந்தன அவற்றை எனது சட்டைப் பையில் வைத்துக்கொண்டு ராயுவுடன் கால இயந்திரம் விடப்பட்ட இடத்தை நோக்கிச் சென்றோம். கால இயந்திரத்தில் ஏறி மிண்டும் 2011 ஐ நோக்கி புறப்படஆரம்பித்தோம் மீண்டும் அதே ஒளி.    
                                                  
.....................................................................

2011.06.11  08.05.01 pm இன்று


         நான் காலஇயந்திரத்தில் இருந்து கிழே இறங்கினேன் எனது ஒரு நாள் பயனம் ஒரு வினாடியினுள் முடிவடைந்ததை உணர்கிறேன் எனக்காக கடற்கரை யோரம் “யோன்” (எனது நாய்) காத்திருக்கிறது ராயு மிண்டும் தனது காலத்திற்க்கு புறப்பட்டான் அவனுக்காக நான் காத்துக்கொண்டு அவனது காலத்தில் இருப்பேன்……


                                                                                                                                                        by:-     
                                                                                                                                                        S.T.Anujan


Note :-  ''நனோ உலகில் ஒரு நாள்''  இச்சிறுகதை Nano Technology போட்டி ஒன்றிற்க் காக எழுதப்பட்டது.  தேசியமட்ட பரிசிலும் வென்றது. 

   இச்சிறுகதையில் ஆங்கான்கே புகுத்தப்பட்ட  நனோ கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் சாத்தியமானவையே.


No comments:

Post a Comment