Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

Thursday, December 12, 2013

Add me fast

Get Likes, Subscribers, Followers, Views and Hits . 


Easy registration, 50 points at start and daily 150 bonus points for active users. 


Start Promotion Just Now and .....


   facebook மற்றும் பல சமுக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த காலத்தில் புது புது வகையில் வலைத்தளங்களை உருவாக்குகிறார்கள் பணத்தேவை  உள்ள புத்திசாலிகள் .



அவ்வகையில்  உருவான  தளம்  ஒன்றே  



ADDMEFAST  

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

      ரயிலுக்கு வெளியே விழுந்து கிடந்த என் கண்கள் சட்டென்று ரயிலுக்குள் தாவி ஒரு குறிப்பிட்ட காட்சியில் குவிந்து மொய்த்தன 

   பொன்னிறக் கூந்தல்  கொண்ட  பெண்ணொருத்தியைத் தன் மொத்த நெஞ்சிலும் சாய்த்துக்கொண்டு அவள் காத்தாடி வாரங்களில் விரல்களால் வீணை வாசித்துக் கொண்டுடிருந்தான் இம்மை மறந்த இளைஞன் ஒருவன் .

      தங்கள் இருவரைத் தவிர , இந்த பூமியில் அனைவரும்  அகிறினைகலாய்    ஆகுக  என்று சபித்துவிட்டு  ஆரம்பித்தர்தார்கள் அவர்கள் ஆட்டத்தை  .


Monday, November 25, 2013

கோப்பாய் விமானத்தளம்

இரண்டாம் உலக  யுத்த காலத்தின் பொது யாழ்ப்பாணத்தின் கோப்பாய் வடக்கு பகுதியில் உப்பற்றின்  மேற்கு  கரையாகவுள்ள தரவை நிலத்தில் விமானத்தளம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது  .

உப்பற்றம் கரை ஓரமாக இருந்த தாழை மரங்கள் வெட்டி அகற்றி தரவை பேரு வெளியாக்கப்பட்டது .

ஆனால்

முதன் முதலாக விமானம்  தரை  இறங்கியபோது  எதிர்பாராமல்  பெய்த  பேரு மழை  காரணமாக  விமானத்தின்  சில்லுகள்  புதைந்து  விமானம்  சேதமாகியது  .

இதனால்  கோப்பையில் விமானத்தளம் அமைக்கும் முயற்சி அத்தோடு கைவிடப்பட்டு பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டது .

from  Nankooram

Tuesday, November 5, 2013

Consumer culture

  விளம்பரங்கள் எவற்றையும் புதிதாகவே வைத்திருக்க வற்புறுத்துகின்றன ஒரு பொருள் உபயோகத்தில் இருக்கும் போதே அது நல்ல இயங்கும் நிலையில் இருப்பினும் கூட அதை தூக்கி வீசி புதிய மொடலுக்கு மாறுமாறு கோருகிறது 

  எறிவதற்கு முன்னால் இன்னொரு முறை பயன்படுமா என்று பார்த்து அதன் உச்ச ஆயுள் வரைக்கும் பயன்படுத்தி வந்த நமது சிக்கனப் பயன்பாடு இன்று விளம்பர தாரர்களின் செல்வாக்கினால் உபயோகத்தில் இருக்கும் போதே கழித்து விடும் கலாஷ்சாரமாக மாற்றம் கண்டிருக்கிறது . 

   இது நமது உழைப்பையும் பணத்தையும் அழிப்பதுடன் நம்மை முட்டாள்களாகவே வைத்திருக்கிறது

      I phone 5c ஒன்றையே வாங்கினாலும் உங்கள் தேவை பூர்த்தி அடையப்போவதில்லை நாளை மீண்டும் 6 6s என தொடர்ந்து கொண்டே இருக்கும்

                         

RJ SHIVA'S PROFILE

LIFE IS LIKE A NORMAL BISCUIT. IF YOU ADD LOVE, WHICH IS BUTTER, THEN LIFE BECOMES A BUTTER BISCUIT!!
- Shiva

I'm currently reading : Menu card at Andra Meals

RJ-ing style : Superstar Rajinikanth Style - Dishhhhhhhhhhhhhhhhhhum!! indha vainko!!

Personality type : Joker in a Circus

Fashion : TV. I like it. but we should always create our own fashion. 

Passions : of Christ! (Jesus Never fails)

Sports : Daily 7 -7.30: Golf, 8-9: Tennis, 10-11: Car Racing, 12- 12:30: Mini Lunch after that Horse Riding!! Love to say all these but very local guy who loves cricket and I play football and Chess

Books : Dictionary. But still not able to finish it!! 

Sunday, October 13, 2013

Service


     ஒரு புயல் உமது ஊரை நோக்கி வருகிறது நீர் ஒரு காரில் உரை விட்டு வேகமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறீர் நீர் செல்லும் வழியில்  
       
       ஒரு வயதான பெரியவர் 
       ஒரு சிறுவன் 
       உமது காதலி 

ஆகியோர் உதவி கோரி நிற்கின்றனர்  ஆனால் உமது காரில் ஒருவரயெ ஏற்ற இடம் உள்ளது நீர் என்ன செய்வீர்....?

Monday, January 7, 2013

நாம் உணவு உட்கொண்ட பின்பு தூக்கம் வருவது ஏன் தெரியுமா.?

இது உடலின் குருதிச் சுற்றோட்டத்திலேயே தங்கி உள்ளது.   உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் குருதி ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே செல்கிறது. ஆனால் நாம் உணவு உட்கொண்டதும் இந்த விகிதம் மாறுபடுகிறது. நாம் உணவு உட்கொண்டதும் இரைப்பையின் தொழிற்பாடு துரிதமடைவதால் , அந்தப் பகுதிக்கு குருதி அதிகம் தேவைப்படுகிறது.ஆகையால் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைகிறது.  இதனால் மூளையின் செயற்பாட்டுத் திறனும் குறைவடையும். இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒரு வித மந்த நிலை ஏற்படுகிறது.உணவு உட்கொண்டதும் தூக்கம் வர இதுவே காரணம்.





Tuesday, December 25, 2012

உயர்வாக சிந்தியுங்கள்...!

     ஒரு செல்வந்தர் தனது விலையுயர்ந்த அழகிய காரை ஒரு ஏழை சிறுவன் ஆவலுடன் பார்த்துக்  கொண்டிருப்பதை கண்டார். அச்சிறுவனை காரில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் போய் வந்தார் . 
    
      கார் சவாரிக்கு பிறகு சிறுவான் 
   '' உங்களது கார் மிகவும் அருமையாக இருக்கிறது . விலை மிகவும் அதிகமாக இருக்குமே ! இந்த காரின் விலை என்ன ? ''  என்றான் .

      அதற்கு அச்செல்வந்தர் , " எனக்கு தெரியாது இதை எனது சகோதரர் பரிசாக தந்தார் '' என்றார் .    அதற்க்கு சிறுவன் ,      ''அகா எவ்வளவு அருமையான சகோதரர் ! ''  என்று வியப்புடன் கூறினான் . 

       நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் . " உனக்கும் என் சகோதரன் போல் ஒருவன்  இருக்க வேண்டும் என்று தானே நினைகிறாய்?'' என்றார் செல்வந்தர் .

    அதற்க்கு அந்த சிறுவன் ''இல்லையில்லை!

Wednesday, December 19, 2012

கப்பல் எப்படி மிதக்கிறது?



 அனைத்து வாசக அன்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள் .  

   ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு ஏற்படுகிறது. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

   சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் எடை உண்டு. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

   10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.

Tuesday, December 18, 2012


உலகைக் உலுக்கிய புகைப்படம் !

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படம்

உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..

அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

Friday, December 7, 2012

! * உயிருக்காகப் போராடிய நோயாளியை ஏற்ற மறுத்த ‘அம்புலன்ஸ்’ !


           வடமராட்சி கிழக்கு மருந்தங்கேணி வைத்தியசாலைக்கு நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நோயளி ஒருவரை உறவினர்கள் கொண்டடு சென்ற போது.மேலதிக சிகிச்சைக்காக அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அங்கு கூறப்பட்டது.ஆனால் அந் நோயளரைக் கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் அங்கு இருக்கிவில்லை. இது பற்றி உறவினர்கள் கேட்ட போது அம்புலனஸ் வைத்தியரை ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.  உடனடியாக அப்பகுதிக்கு வந்த பேரூந்தில் நோயளரை ஏற்றி பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த வழியில் மருதங்கேணி வைத்தியசாலை அம்புலன்ஸ் வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பேரூந்தின் சாரதி அம்புலன்ஸ் சாரதியை வழி மறித்து வேகமாக பேரூந்தை கொண்டு செல்ல முடியாது உங்கள் வண்டியில் உடனே கொண்டு செல்லுங்கள் எனக் கூறிய போது ‘ வைத்தியரை மட்டுமே இதில் கொண்டு செல்லலாம் எனக்கூறி அம்புலன்ஸ் சாரதி அதை மறுத்ததாகத் தெரியவருகின்றது.  இதனால் அங்கு முறுகல் நிலை தோன்றியதாகவும் தெரியவருகின்றது. பின்னர் பேரூந்திலேயே நோயாளி பருத்தித்துறை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். 

Thursday, November 15, 2012

எல்லாம் நன்மைக்கே < All the best >


ஒரு ஏழை படிப்பறிவு அற்ற மனிதன் தனது நாளாந்தத உணவுக்காக ஒரு தேவாலயத்தில் <சேர்ஷ்> வேலைய்க்கு சேர்ந்தான்.

அவனது வேலை காலையும் மாலையும் 6.00  மணிக்கு சரியாக மணி அடிக்க வேண்டும் .


அதற்க்கு சம்பளமாக அவனுக்கான தின உணவும் தங்குவற்கு இடமும் கிடைய்த்தது.


அவன் அங்கேயே பல வருடமாக இருந்து வந்தான்.


பின்னர் ஒரு புதிய பாதிரியார்  வந்திணய்ந்தார்

Wednesday, November 14, 2012

நம்பிக்கையை திடப்படுத்துங்கள்


   முன்னொரு   காலத்தில்  அமரிக்காவை   சேர்ந்த்தவர்   ஒருவர்  நடிகர் அகவேன்டும்  என்று  விரும்பினார்.

    ஆனால்   பல  தடவை    முயற்சிசெய்தும்   அவரால்    ஒரு  கோமாளியாகவே  நடிக்க  முடிந்தது.

     இதனால்  வாழ்க்கையை  கடும்  கவலையில்  கழித்தார்.

     பின்னர்  அவர்  ஒரு  அடியாளாக  இருந்து   வந்தார்.

    அவ்வாறு   இருந்து   வருகயில்   ஒரு

Tuesday, November 13, 2012

அண்ணே காமடியாமாம்...!

கொடும கொடும நூ கோவிலுக்கு 
போன அங்க ரெண்டு கொடுமை
ஜிங்கு ஜிங்கு நூ ஆடிச்சாம்..      
அட போடா .. 

Sunday, December 18, 2011

இருள் மறைத்த நிழல்

         தன்னை நிழல் போல் தொடரும் நேசத்தை இருளில் தேடும் ஒரு இளைஞனின் மென்மையான காதல் கதை....

        அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவாதமாக திருப்பினாள் மிதுனா. அந்த பிரம்மாண்டமான வீட்டின் கம்பீரமும், அப்பொழுதுதான் பூத்திருந்த செவ்வரளி பூக்களும்,வீட்டின் வாயில்வரை இருபுறமும் சீராக பூத்து குலுங்கும் ரோஜாக்களும், எங்கும் செயற்கை வண்ணம் தோன்றாமல் அற்புதமாய் இருந்த அந்த தோட்டத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியும் அவளது கலக்கத்தை கொஞ்சம் மறக்கடிக்கத்தான் செய்தன. வீடா அது? மாளிகை என்பது பொருத்தமாக இருக்கும்.