Thursday, November 15, 2012
எல்லாம் நன்மைக்கே < All the best >
ஒரு ஏழை படிப்பறிவு அற்ற மனிதன் தனது நாளாந்தத உணவுக்காக ஒரு தேவாலயத்தில் <சேர்ஷ்> வேலைய்க்கு சேர்ந்தான்.
அவனது வேலை காலையும் மாலையும் 6.00 மணிக்கு சரியாக மணி அடிக்க வேண்டும் .
அதற்க்கு சம்பளமாக அவனுக்கான தின உணவும் தங்குவற்கு இடமும் கிடைய்த்தது.
அவன் அங்கேயே பல வருடமாக இருந்து வந்தான்.
பின்னர் ஒரு புதிய பாதிரியார் வந்திணய்ந்தார்
அவர் நீ தினமும் உணவு உண்ணும் முன் இந்த புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும் இல்லையேல் உனக்கு இங்கு வேலை இல்லை என்று கூறவே அவனும் கையெழுத்திட முயற்சி செய்தான் அனால் அவனால் முடியவில்லை
பின்னர் மிக மனவருத்தத்துடன் தேவாலயத்தை விட்டு வெளியேறினான்
பின்னர் பல காலம் முயற்சி செய்து ஒரு பெட்டி கடை ஆரம்பித்தான்....
பலவருடத்திற்கு பின்னர் அவன் ஒரு தொழில் அதிபர் ஆகி வங்கி ஒன்றிற்கு பணம் போடுவதற்கு வந்தான்
அங்கெ அவன் கையெழுத்திடாமல் கைநாட்டூ வைப்பதை பார்த்த ஒருவர்
" கையெழுத்திட தெரியாமலே இந்த அளவு பெரியவனாகி உள்ளாரே, கையெழுத்திட தெரிந்திருந்தால்.....! < டான்க் டான்க் டான்க் > "
இப்ப சொல்லுங்க அந்த பாதிரியார் நல்லவர் தானே ...!
< கதை புரின்சிதா ? >
Labels:
Article
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment