ஒரு செல்வந்தர் தனது விலையுயர்ந்த அழகிய காரை ஒரு ஏழை சிறுவன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டார். அச்சிறுவனை காரில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் போய் வந்தார் .
கார் சவாரிக்கு பிறகு சிறுவான்
'' உங்களது கார் மிகவும் அருமையாக இருக்கிறது . விலை மிகவும் அதிகமாக இருக்குமே ! இந்த காரின் விலை என்ன ? '' என்றான் .
அதற்கு அச்செல்வந்தர் , " எனக்கு தெரியாது இதை எனது சகோதரர் பரிசாக தந்தார் '' என்றார் . அதற்க்கு சிறுவன் , ''அகா எவ்வளவு அருமையான சகோதரர் ! '' என்று வியப்புடன் கூறினான் .
நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் . " உனக்கும் என் சகோதரன் போல் ஒருவன் இருக்க வேண்டும் என்று தானே நினைகிறாய்?'' என்றார் செல்வந்தர் .
நான் உங்கள் சகோதரரை போல் இருக்க விரும்புகிறேன் ''
சகோதரர் களே எப்போதும் அடுத்தவர்கள் எதிர்பார்ப்பை விட உயர்வாக சிந்தியுங்கள்
No comments:
Post a Comment