நம் ஆடைகளை சுத்தம் செய்வதை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சலவை இயந்திரம் தற்போது மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பை வைடிவில் அமைக்கப்பட்டுள்ளது.180 கிராம் நிறையை கொண்டுள்ள இந்த சலவைப்பையானது இடத்திற்கு இடம் எடுத்துச்செல்லமுடியும் என்பது விசேட அம்சமாகும். இதில் ஓரே தடவையில் 2 தொடக்கம் 3 லீட்டர் வரையிலான நீரை பயன்படுத்த முடிவதுடன் சம்போ, சலவை தூள்கள் போன்றனவற்றை பயன்படுத்தி 20-40 செக்கன்களில் சலவை செய்ய முடியும். இவை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment