Thursday, April 25, 2013

வெள்ளி முளைச்சிருக்கு


அதிகாலை 
அலாரம் அடிக்கும் 

பற்பசைக்  கூடு 
கதவுக்குள் நசியும் 

நட்சத்திரமாய் மின்னி 
சவர்க்காரத்துண்டு 
நழுவி விழும் 

சீனிப் போத்தலும் 
ஜாம் போத்தலும் 
பொது எதிரிக்கெதிராய்
போராடும் 
பாவம் கரண்டி

பாகப் பிரிவினையில் பாணுக்கும் 
கூடுதலாய் வெட்டு விழும் 

வாயுக் குடுவை 
நிலத்தில் படுக்க 
அடுப்பில் 
தீ கசியும் 

வாயுவில் வாகனம் இயங்குமாம் 
ஆனால் ஏனோ 
என்ர வாகனம் 
இயங்க மறுக்கிது 
பெற்றோல் தாங்கியை 
நிரப்பியிருக்கும் 
வாயுவில்

விரல்கள் வெளிக்கிட்டுவிட்டன 
வீட்டின் 
சந்து போந்தெங்கும்
சில்லறை தேடி 

மாலை திரும்புகையில் 
மனது கனக்கும் 
எதிர் பார்ப்புகளோடு 
காத்திருக்கும் வீடு 

காதல் கடிதங்களுக்காய் 
அன்று நான் 
திட்டித் தீர்த்ததற்க்கு
இன்று பழிவாங்குகிறான்
தபாற்காரன் 

கேட்காமலேயே 
மின்சாரம் தொலைபேசி 
தண்ணீர்க் கட்டண 
பட்டியலையெல்லாம் 
பெட்டிக்குள் 
போட்டுவிட்டுப்போகிறான் 

வீட்டுக்காரன் 
கதவை தட்ட 
இதயத்தில்  சத்தம் 

என்ன இது ...!
மாதக் கடைசியும் 
மாநகர வாழ்வும்    



by சடகோபன் 
மண்ணில் தொலைந்தத மனது தேடி ...

No comments:

Post a Comment