Saturday, April 27, 2013

வேலிபொட்டு


கூடி வாழ்தல் எங்கே ?
மாவிடிக்கசின்னம்மா 
அதை அரித்துப்போட 
பெரியம்மா ,
அரித்தமாவை வறுத்தெடுக்க 
பக்கத்து வீட்டுபாட்டி .
தொலைந்துபோயின இவை இங்கு .


நெல்லு விதைக்க 
எங்கள் மாமா ,
களைபிடுங்க எங்கள் மாமி ,
அறுவடை 
ஊர் கூடி முடித்தது .
பொலிந்தவாழ்வுதொலைந்த்தது .


சுற்றம் சுகம் கேட்க்க 
எங்கவேலிகள் 
பொட்டொன்று வைத்திருக்கும் 
அவ்வழியால்  ஊர் சுற்றிவருவோம் 
உறவின் வழிகள் அடைக்கப்பட்டன .


நிலமுற்றத்தில் 
அம்மா கதை சொல்ல ,
சுற்றம் கூடி ஆமாப் போடும் .
வெற்றிலைதாம்பூலம் நகரும் 
கல்யனவயதினருக்கு ,


ஊர் சேர்ந்தது 
மாப்பிளை , பெண் தேடும் !
பக்கத்து தெருவிலிருந்தது 
பந்தல் போடஆள் வரும் 
பலகாரம் சுட 
சொல்லாமல் கூடும் உறவுகள் 


மதியம் என் வீட்டுச் 
சோற்றோட ,
முன் வீட்டுக் குழம்பும் ,
பின் வீட்டுப் பொரியலும் 
மணக்கும் .




இன்று 
உடனடி அப்பம் தோசை மா ;
உடைத்துகல்மண்  நீக்கிய அரிசிப்பொதி  
விதைக்க அறுக்க இயந்திரம் 
வேலைக்கு ஆட்கள் சம்பளத்துக்கு 
எங்களுக்கும் அயலுக்கும் இடையே 
உறவறுக்கும் மதில்கள் .


முகப்புத்தகத்தில் தொலைநகலில் ஜாதகம் ,
பெண்பார்ப்பு ,
மண்டபத்தில் திருமணம் .
அரைநாளோடு அந்தசடங்கும் 
நிறைவடையும் 
தொலைக்க முடியாதவை 
தொலைந்தது போயின  


by திருமதி . ஸ்ரீலெக்கா பேரின்பகுமார்   

No comments:

Post a Comment